தவேப வேளாண் இணைய தளம் ::வளம்குன்றா வேளாண்மையின் ஆராய்ச்சி & கல்வி திட்டம்

நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டம் (SARE) SARE என்பது வளம் குன்றா வேளாண்மை செய்முறைகளை ஆய்வு செய்வது மற்றும் வெளியீடுவதற்கான அமெரிக்கா வேளாண் துறையாகும். இந்த திட்டத்தில், 3000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முதலில், இந்த திட்டம் குறைந்த இடுபொருள் இடும் வளம் குன்றா வேளாண்மை திட்டமாக இருந்தது. பின் 1985-ம் ஆண்டு வேளாண்மையில் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான அறிவியல் சார்ந்த செய்திகள் விவசாயிகளுக்கு தரும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் காங்கிரஸில்  SARE என்று தொடங்கப்பட்டது. LISA திட்டம் 1998-ல் 3.9 மில்லரியன் டாலருடன் தொடங்கப்பட்டது. உணவு, வேளாண்மை, பாதுகாத்தல் மற்றும் வர்த்தக சட்டம் 1990 என்படி LISA, என்பது நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடன் இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று, ஒருங்கிணைந்த பயிர், கால்நடை செயல்பாட்டிற்கான ஆய்வுகளுக்கும், மற்றொன்று, விரிவாக்க சேவை நிறுவனங்களுக்கு பயிற்சி கொடுப்பதும் ஆகும்.  1991-ல் SARE திட்டம்  சுற்றுப்புற பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்த வேளாண்மையை நிர்வகிக்க ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு : நிலையான வேளாண்மை வலை செயல்

வலைத்தளம் : http://www.sare.org

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013